கோவை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு ஓ போடுங்கள்
அப்துல் கலாம் உருவ பொம்மையை எரித்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்களை பாராட்டியே ஆக வேண்டும் என்று தமிழக மீனவர்கள் மற்றும் கூடன்குள மக்கள் கூறுகின்றனர்.
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை சோனியா அரசு மிகத் தந்திரமாக தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. இதே சோனியா காந்தி அரசு அப்துல் கலாம் அவர்கள் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு தவியாய் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது சோனியா காங்கிரஸ் கும்பல், இந்திரா காந்தியின் வீட்டில் சமையல் பணி புரிந்த பிரதீபா பாட்டில் என்ற அம்மையாரை ஜனாதிபதி பதவியில் ஏற்றி அழகு பார்த்தது. சமையல் பணி புரிந்தவர் என்ற குறையாகப் பார்ப்பதன்று விசயம். இந்திய மக்களிடம் மிகப் பெரும் அறிவாளி என்றும் விஞ்ஞானி என்றும் அறியப்பட்ட அப்துல் கலாமை சர்வ சாதாரணமாக தூக்கி எறிந்தது காங்கிரஸ் பெருச்சாளிகள் கூட்டம், ஏன் என்றால் அவர்களுக்குத் தெரியும் அப்துல் கலாம் ஒரு சிறந்த அறிவியல் தெரிந்த அடிமை என்று.
இந்த உண்மையை உணராமல் தான் ஒரு மிகப்பெரும் அறிவாளி, விஞ்ஞானி என்று பித்துப் பிடித்து ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறார், முன்பு பா.ஜ.க. கும்பலுக்கு ஒரு ஏமாந்த சோணகிரி முஸ்லிம் ஒருவர் தேவைப்பட்டார், பார்த்தார்கள் சுற்று முற்றும் சிக்கினார் இந்த தலைமைப் பண்பு சிறிதும் அற்ற மிக்க சிறந்த அடிமை, பொக்கரானில் அணு குண்டை போட்டு உடைத்தார் என்றும், அமெரிக்காவிற்கு தெரியாமல் அந்த குண்டைப் போட்டார் என்றும் பி.ஜெ.பி.கும்பல் புளுகியது. அமெரிக்காவிற்கு தெரியாமல் இவர்கள் அவ்வளவு பெரிய ராஜதந்திரிகள் என்று ஊடகங்கள் புளுகின, இந்திய மேட்டுக் குடி கூட்டமும் ஆகா..! அமெரிக்காவுக்கே தெரியாமல் கலாம் குண்டைப் போட்டார் என்றால் என்ன சின்ன விசயமா..? என்று புளங்காகிதம் அடைந்தார்கள், அடைந்து கொண்டும் இருக்கிறார்கள் இன்று வரை, அமெரிக்காவிற்கு தெரியாமல் எந்த இந்திய அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும் சின்ன கொட்டாவியே விட முடியாது என்று நாம் சொன்னால் நம்பவா போகிறார்கள் இந்தக் கூட்டம்..? கிடக்கட்டும் இவைகள் அனைத்தும்.
தற்பொழுது இந்த விஞ்ஞானி கலாம் அவர்கள் இலங்கையில் நாலு நாள் டேரா போட்டு வருகிறார். அங்கேயும் யாழ் பல்கலைக்கழகத்தில் பேசி உள்ளார். அப்போது ஒரு மாணவி சிறந்த கேள்வி ஒன்றை கேட்டாராம். அது மாதிரி கேள்வியை இதுவரை யாரும் கேட்டதில்லையாம் இவரிடம். கேள்வி என்ன என்று தெரிந்தால் அட கருமமே…! என்று எண்ணத் தோன்றும். இவை அனைத்தையும் விட தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் ஒரு யோசனை ஒன்றை கூறியுள்ளார் பாருங்கள், எப்படி சாதூரியமாக நைச்சியமாக ஆப்பு வைத்துள்ளார் என்று தெரியும். அதாவது பாக் ஜலசந்தியில் மூன்று நாட்கள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கலாம், மற்ற மூன்று நாட்கள் இலங்கை தமிழர்கள் மீன் பிடித்துக் கொள்ளலாம். எஞ்சிய ஒரு நாள் விடுமுறை நாளாம். எப்படி இருக்கிறது யோசனை..? அதாவது எப்படியும் தமிழக மீனவர்களை கடற்கரை பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் திட்டம் தான் இது.
குமரி பகுதியில் முன்பு ஒரு முறை சுறா மீன் பிடிக்கும் ஒரு தேர்ச்சி பெற்ற மீனவ குழுவினர் இருந்தார்கள். ஆங்கிலேயர் காலத்தில், இவர்கள் சூலாயுதம் என்ற சிவ பெருமானின் ஆயுதத்தை கொண்டு சுறா மீனை பிடித்து வந்தார்கள், விசைப் படகுகள் கிடையாது, டீசல் என்ஜின் பொருத்திய படகுகள் கிடையாது. பாய்மர கலம் கொண்டு சுறா வேட்டை ஆடினார்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்த ஒரே காரணத்திற்க்காக, இந்த சுறா மீன் வேட்டை ஆடிய, தேர்ச்சி பெற்ற குழுவினரை வாரம் ஒரு முறை மீன் பிடிக்க அனுமதி அளித்தார்கள் ஆங்கிலேயே அதிகாரிகள், அதுவும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும். கயிறு திரிக்கும் தொழிலுக்கு மாறிப் போனார்கள் அந்த சிறப்புப் பெற்ற மீனவ கிராமம். இன்றும் அந்த கிராமத்தினர் இருக்கிறார்கள் கயிறு திரிக்கும் தொழிலை செய்து கொண்டு. சுறா மீன் வேட்டையாடுதல் முற்றாக மறந்து.
அதைப் போன்று தமிழக மீனவர்களை கடற்கரைப் பகுதியில் இருந்தே அப்புறப்படுத்த திட்டத்தை தீட்டி விட்டார்கள் சோனியாவும் ராஜபக்சேவும். ஆனால் எப்படி அமுல் படுத்துவது என்று அடி மேல் அடி எடுத்து வைக்கிறார்கள். இந்த முறை தமிழ் தேசியவாதிகளும், தமிழ் உணர்வாளர்களும் ஏமாந்து விட்டால் அவ்வளவுதான். என்ன செய்யப் போகிறார்கள் தமிழக மீனவர்கள்..? ஒரு பக்கம் பெரியாறு அணையை உடைத்து, இடுக்கி அணையை நிரப்பி நியூட்ரினோ ஆய்வுக்கு அதே தேனி பகுதியில் உள்ள மலைகளின் சுரங்கங்களுக்கு அனுப்ப உள்ளார்கள். முல்லைப் பெரியாரை நம்பி இருக்கும் ஐந்து மாவட்ட மக்கள் இடம் பெயர்வதைத் தவிர வேறு வழியே இல்லை.
தஞ்சை பகுதி தொடங்கி மாயவரம் வரை இருக்கும் ஆற்றுப் படுகையில் மீத்தேன் என்ற வாயுவை எடுப்பதற்கு டாடா போன்ற நிறுவனங்கள் இடம் வாங்கி விட்டார்கள், தற்பொழுது 40 இடங்களில் மீதேன் வாயுவை எடுப்பதற்கு அனுமதி வழங்கி விட்டார்கள். மீதேன் வாயுவை எடுத்து பெரிய கிட்டங்கிகளில் நிரப்பி, கொண்டு போய் சேர்ப்பதற்குள் அந்த காவிரி பகுதி விவசாயிகள் அனைவரும் இடம் பெயர்வதை தவிர வேறு சிறந்த வழி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. வேலூர் திருவண்ணாமலை மக்கள் மட்டும் எஞ்சி இருப்பார்கள் என்று நினைப்பீர்கள், அவர்களுக்கும் பெரிய ஆப்பு ஒன்று தயாராக உள்ளது. தோரியம் அந்த மலைப் பகுதியில் நிறைய உள்ளதாம், எனவே அந்தப் பகுதி மக்களும் இடம் பெயர்வது ஒன்று தான் நல்ல வழி, எஞ்சிய தரைப் பகுதிகளில் ராணுவ முகாம்கள் ஒரு நாலைந்து கொண்டு வரப் போகிறார்கள். ஆக, தமிழ் நாட்டு மக்கள் வெகு விரைவில் புலம் பெயர் மக்களாக மாறப் போகிறார்கள், இல்லையென்றால் அடித்து விரட்டப்படுவார்கள் என்று நம்பலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
மாயாண்டிக்கருப்பு
அப்துல் கலாமின் கொடும்பாவி எரிப்பு: 12 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை எரித்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்கள் மனதில் உள்ள அச்சங்களைப் போக்க முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் முயற்சி செய்து வருகிறார். அணுமின் நிலையத்தை பார்வையிட்ட அவர் அது மிகவும் பாதுகாப்பானது, அதனால் யாரும் கவலைப் பட வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து பயப்பட வேண்டாம் என்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் நிதி நிலைமை மேம்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அவர்கள் வந்தபோது ஒரு மாணவன் கலாமின் உருவ பொம்மைக்கு தீ வைத்தார். அதை உடனே போலீசார் அணைத்துவிட்டு அந்த 12 மாணவர்களையும் கைது செய்தனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்தார். அவருக்குப் போகும் இடமெல்லாம் சிறப்பாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது கொடும்பாவி தமிழகத்தில் முதல்முறையாக, ஏன் இந்தியாவிலேயே முதல்முறையாக எரிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















மீனவனாக இறந்தாலும் கேரளாவில் இறக்க வேண்டும்.
What happened to dozens of LTTE members who surrendered ?
Documentary on Sri Lanka’s Genocide Impact the Geneva HR Session?
UN Panel Report more details than LLRC
Court to decide if US can save Rajapakse from war-crime charges
கல்லையும் உருக வைக்கும் பட்டினத்தார்




