Published On: Mon, Jan 30th, 2012

அழிவியல் (அணுகுண்டு) விஞ்ஞானி அப்துல் கலாமிற்கு புரியாத தமிழரின் சோகம் ஆர்ஜென்ரீனாவில் புரிந்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழினத்தின் மீது மேற் கொள்ளப்பட்ட இன அழிப்பினை Diario latarde ஊடகமூடாக 2கோடியே 22இலட்சம் தென் அமெரிக்கக் கண்ட மக்களிடம் கொண்டு சென்ற பிரித்தானிய தமிழர் பேரவை

1948ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசால் மேற் கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பான செய்தியினை Diario latarde ஊடகமானது வெளியிட்டிருந்தது.

இதில் 2008ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு மே 18 வரையான காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் மீதான உச்சக்கட்ட இன அழிப்புக்கள் (Genocide) மேற்கொள்ளப்பட்டிருப்பதையும், அங்கு மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்பதையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், இப்படுகொலையில் 40,000 பொது மக்கள் (Civilians) கொல்லப்பட்டும் 146,679 மக்கள் காணாமற் போயும் உள்ளனர் என ஆர்ச் பிஷப் ராயப்பு ஜோசப் அவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தமிழினத்திற்கான நீதி வேண்டி குரல் கொடுத்துவரும் பிரித்தானிய தமிழர் பேரவையானது இச் செய்திக்கான ஆதாரங்களை Diario latarde ஊடகமூடாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பாகம் ஒன்று 24.01.2012 செவ்வாய்க்கிழமை அன்று வெளிவந்தது. இதனை 48 மணித்தியாலங்களில் 2கோடியே 22இலட்சம் மக்கள் பார்வையிட்டிருப்பதாக அவ் ஊடகம் குறிப்பிட்டிருக்கின்றது. இதில் பாகம் இரண்டு வெளியீடு 27.01.2012 அன்று வெள்ளிக்கிழமை வெளிவந்துள்ளது.

இச் செய்தியின் முழுமையான வடிவத்தினைப் பார்வையிட இங்கே அழுத்தவும் :

 - Spanish (Original)

La masacre de los Tamils en Sri Lanka 

http://www.facebook.com/

-English (Translation)-The slaughter of the Tamils ​​in Sri Lanka Argentine newspaper

பிரித்தானிய தமிழர் பேரவை.

இந்த மின்னஞ்சல் ஊடக உங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள்

E-mail: diario_latarde@yahoo.com.ar

அணுகுண்டு விஞ்ஞானி அப்துல் கலாமிற்கு புரியாத தமிழரின் சோகம் ஆர்ஜென்ரீனாவில் புரியப்பட்டுள்ளது.

மே 2009 என்பது ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு இன அழிவுக்கான அடையாள மாதம் என்றால் மிகையாகாது. இந்திய இராணுவ.. மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் மேலும் 25 நாடுகளின் இராணுவ.. மற்றும் புலனாய்வு உதவிகளுடன் சிறீலங்காச் சிங்களப் பயங்கரவாத பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை அவர்களின் சொந்த நிலத்தில் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த மாதம் அது.இந்தப் படுகொலைகளை இந்திய ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை கண்டித்ததில்லை. ஏன் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து போன இந்திய அழிவியல் விஞ்ஞானி.. அணுகுண்டு விஞ்ஞானி.. அப்துல் கலாம் கூட ஒரு வார்த்தை போரால் உறவுகளை இழந்து நிற்கும் மக்களுக்கு ஆறுதலாகக் கூறவில்லை. போர் இழப்புக்கள் பற்றிய பேச்சையே அவர் பேசவில்லை. மாறாக.. தமிழ் – சிங்கள – ஆங்கில.. மும்மொழி இணைப்பு.. ஐக்கிய சிறீலங்கா… என்று சாத்தான் வேதம் மட்டும் ஓதிச் சென்றுள்ளார்.ஆனால் தென்னமரிக்க நாடான ஆர்ஜென்ரீனாவில் ஸ்பானிய மொழியில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை பற்றிய கட்டுரை ஒன்று சுமார் 22 மில்லியன் மக்களால் படிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையில் மன்னார் மறைமாவட்ட ஆண்டகை அருட் தந்தை இராஜப்பு ஜோசப் அவர்களால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின் அடிப்படையில் சுமார் 150, 000 தமிழ் மக்கள் 2008 – 2009 காலப்பகுதில் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போகடிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன்.. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது மட்டும் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமையும் வெளி உலகிற்கு ஆதாரங்களோடு கொணரப்பட்டுள்ளது.

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி சேவையினரை அடுத்து இந்த ஆர்ஜென்ரீன ஸ்பானிய மொழி ஊடகமே அதிக அக்கறையுடன் தமிழர்கள் மீதான சிங்கள பேரினவாத இனவெறி அரசின் இனப்படுகொலையை சர்வதேச மக்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில் உண்மையை திரித்து மக்களுக்கு பொய் முகம் காட்டி போலியாக ஒற்றுமை பற்றி பறைசாற்றிப் புகழ் வளர்க்கும் அப்துல் கலாம் போன்ற சிற்றறிவாளர்களை விட.. உண்மையை உள்ளபடி உலகிற்குச் சொன்ன இந்தப் பத்திரிகைக்கு மனமார்ந்த நன்றிகளை மானுடம் சார்ந்து தெரிவித்துக் கொள்கின்றோம்.

Sri Lanka genocide story draws 22m visitors, says Argentine paper.

The Spanish Language Diario La Tarde, an evening journal published by independent journalists in West Argentina said the recent web publication of the story “Genocidio: (Primera entrega) – La masacre de los Tamils en Sri Lanka,” [Genocide: (First Delivery) The Slaughter of Tamils in Sri Lanka] drew 22 million visits in two days. The story appearing in Spanish covers history to the conflict, the slaughter at Mu’l'livaaykkaal, and asserts the post-conflict miliary aggression in Tamil areas as a form of structural genocide.

இணைப்பு 1 

Genocidio: (Primera entrega) – La masacre de los Tamils en Sri Lanka,” [Genocide: (First Delivery) The Slaughter of Tamils in Sri Lanka]

இணைப்பு 2

குண்டுமணி

History of Prabaharan