Published On: Fri, Feb 10th, 2012

ஏன் புரிவதில்லை இந்த துரோகிகளுக்கு ? – 1

ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என பலர் எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் வீழ்ச்சியைப் பற்றியும் பல கோனங்களில் பல வழிகளில் எழுதித் தள்ளிவிட்டார்கள். ஆனால் சகிக்க முடியாத விடயம் எதுவெனில் பெயர், ஊர் அடையாளம் என எதையும் வெளிக்காட்ட தயங்கும் கோழைகளும், துரோகிகளும் எமது விடுதலைப்போராட்டத்தைப் பற்றி விமர்சிப்பதும் அதற்கு அடையாளம் தெரியாத இணையங்கள் களங்கள் அமைத்துக் கொடுப்பதும் மிகவும் வேதனையான விடயம்.

இணையத்தில் எழுதத் தெரியாதவர்கள் வேறு நபர்களை வைத்து அவர்களுடைய கருத்துக்களை எழுதவைத்து வெளியிட்டு அவர்களுடைய வன்மத்தை தீர்த்துக்கொள்கின்றார்கள். இலவச இணையங்கள் இவர்களைப்போன்ற பலருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதுதான் தலைப்பிலேயா முட்டாள்கள் என போட்டுவிட்டீர்களே பிறகு எப்படி இவர்களுக்கு புரியப்போகிறது என நீங்கள் கூறுவதும் எமக்கு கேட்கின்றது.

தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என முளுமையாக ஒதிக்கிவிடமுயாதுதான் ஆனால் அப்போராட்டத்தை சுய விமர்சனம் செய்ய அப்போராட்டத்தை முன்னின்று இறுதிவரை நடாத்தியவர்களுக்கே உண்டு. அதுவும் இனி ஒரு களத்தை அவர்கள் திறக்க முயற்சித்தாலே தவிர அவர்களும் அதைப்பற்றி வெளிப்படையாக விமர்சிக்க மாட்டார்கள். காரணம் இனி ஒரு செயற்பாடு இல்லையெனும் போது விமர்சனங்கள் மட்டும் எதற்காக? அப்படிப்பட்ட விமர்சனங்கள் மக்களை குழப்ப மட்டுமே பயன்படும் என்பது அவர்களுடைய கருத்ததாக இருக்கும் இதுவரையும் அப்படித்தான் இருந்திருக்கின்றன.

சிங்கள பேரினவாதிகளோடு ஆட்சிகள் மாறினாலும் நாம் மாறமாட்மோம் என இனத்தையே காட்டிக்கொடுத்து துரோகிகளாக வலம் வரும் எவருக்கும் அந்த உரிமை இல்லை.

இதில் டக்லஸ், கருணா போன்றோரை குறிப்பிடலாம் டக்லஸ்சை பெறுத்தவரை தமிழ் மக்கள் மணத்தில் ஒரு துரோகியாக மட்டும் அல்லாமல் மிகச்சிறந்த அரசியல் கொமடியனாகவும் இருக்கின்றார், உண்மையில் மக்களும் அப்படித்தான் பார்க்கின்றார்கள். மகிந்தா அவர்கள் என்னிடம் என்றால் காணி மற்றும் காவல்த்துறை அதிகாரங்களை வழங்க விரும்புகிறார் போன்ற கொமடிகளை சிறந்த உதாரணமாக கூறலாம். சிங்கள தேசத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்களுக்கு கவலை இல்லை பல்லை நீட்டிக்கொண்டு துரோகக் கணக்குகளை போட்டி போட்டுக் காட்டி அரசியல் ஆசனங்களை பெறுவார்கள்.

பல காலமாக தனிக்காட்டு துரோகியாக வலம் வந்த டக்லஸ்சுக்கு சில வருடங்களாக பலமான போட்டிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. சில உறுதியான உதாரணங்களை சொல்லுவதற்கு பல காலங்கள் முன் நாம் செல்ல வேண்டும்.

அதாவது தமிழீழ விடுதலைப்புலிகள் புதிதாக உருவெடுத்த போது அவர்களுக்கு பல சோதனைகள் காத்திருந்தது. இவ்வளவு காலம் நாம் இருக்க எமக்கு போட்டியாக ஒரு விடுதலை அமைப்பா என தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தமது விரோதத்தை வெளிப்படுத்தாத அமைப்புகளே இல்லையெனலாம் ஆனால் அவ்வமைப்புகளையும் தனித்து நின்று எதிர்த்தவர் எமது தேசியத் தலைவர்கள் அவர்கள். . ஒரு பக்கம் இவர்களை சமாளித்துக்கொண்டு எதிரியோடு போராட்டம் என இறுதிவரை களமாடினார்கள்.

ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளை எதிர்த்தவர்களில் அனேகமானோர் தாம் யாரிடம் விடுதலை பெற விரும்பி போராட்டம் துவங்கினார்களோ அவர்களிடமே தேடிச்சென்று அடிமையானதோடு தம் செந்த இனத்தையே காட்டிக்கொடுக்கும் துரோகிகளாகவும் ஆனார்கள். தமிழீழமே தீர்வு என இவர்களை நம்பி வந்தவர்களை எதிரிக்கு காணிக்கையாக்கி தம்மை நிலைநாட்டிக்கொண்டார்கள். இவர்களுக்குப் பின் உருவான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மக்களிடம் அவர்களுடைய செயற்பாடுகள் ஊடாக பலம் பொருந்திய அமைப்பாக உருவானார்கள்.

தமிழீழம் என புறப்பட்டவர்கள் தங்களை தாண்டி தமிழர்களுக்கு சிறந்த சக்தி ஒன்று வளர்வதை விரும்பவில்லை. தமிழர்களை இனப்படுகொலை செய்யும் சிங்கள பேரினவாதிகளோடு சோர்ந்துகொண்டு விடுதலைப்புலிகளை அழிக்க விரும்பினார்கள் இத்துரோகிகள். அதாவது இவர்கள் சொல்லும் தத்துவம் தமிழீழத்தை தாகமாக கொண்டு இயங்கும் விடுதலைப்புலிகளை சிங்கத்தோடு சோர்ந்து அழித்துவிட்டு பிறகு இவர்கள் சிங்களபோனவாத அரசோடு போரிட்டு தமிழீழம் பெற்றுத்தருவார்களாம் இதுதான் அன்று இவர்களுடைய சிறந்த இராணுவத் திட்டம்.

மாபெரும் பழம்பெருமை வாய்ந்த ஓர் இனத்தை காட்டிக்கொடுப்புகள் துரோகங்கள் ஊடாக அழித்தொழித்த டக்லஸ் கருணா போன்றவர்களை அமைச்சர் மந்திரி என இவர்கள் பிதற்றுவதை செய்திகள் என மக்களிடம் கொண்டு சோர்ப்பதை தமிழ் எனக் கூறும் ஊடகங்கள் நிறுத்த வேண்டும். தமிழீழ போராட்டமும் சரி இலட்சக்கணக்கில் மக்களும் மரணங்களுக்கு சொந்தக்காரர்கள் இவர்கள்தான் என்பது உலகம் அறிந்த விடயம். ஆனால் மந்திரி அமைச்சர் என இவர்களுடைய பேச்சுக்களையோ போட்டிகளையோ உண்மையான எந்த தமிழ் ஊடகங்களும் பிரசுரிக்கக் கூடாது. அப்படி செய்யும் ஊடகங்கள் இவர்களை ஆங்கீகரித்ததாகவே கருதி மக்கள் இவ்விணையங்களை புறக்கணிக்க துவங்கியிருக்கின்றார்கள். புறக்கணியுங்கள் என கூறிவிட்டு நீங்களே இங்கே செய்தியாக்கி இருக்கின்றீர்கள் என தயவுசெய்து அறிவிலிகளாக இருக்காதீர்கள்.

தொடரும்…

http://rste.org/
நாங்கள்
தமிழீழ புரட்சிகர மாணவர்கள்
info@rste.org

History of Prabakaran & LTTE