ஈழத் தமிழர்களுக்கு யூனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈழத்துத் தமிழ்ச் சிறுமியின் பாடல்
ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமை வேறெந்த இனத்துக்கும் நடக்கக் கூடாது என்பதுதான் இற்றைவரை எம்மினம் நினைப்பது.
காணொளி
அந்தளவுக்கு எம்மினம் பட்ட துன்பங்கள் வார்த்தைகளாலையோ, வரிகளாலையோ கூறிவிட முடியாது. அதிலும் புலம்பெயர் நாடுகளில் இருக்கக் கூடிய ஈழத் தமிழர்கள் தங்கள் நாடு, ஊர், வீடு என்பவற்றையிழந்ததுமட்டுமன்றி அதனை எப்போது காண்போம் என்ற ஏக்கமும் அவர்களை வாட்டி வருகின்றது.
ஆனால் கனடாவில் பிறந்து வளர்ந்திருக்கக் கூடிய பிஞ்சுப் பாலகி தனது ஊரையும், தன் வீட்டையும் நினைத்து தமிழ் மக்களுக்கு நடந்த சோகத்தை உலகெங்கும் எடுத்துக் கூறியுள்ளார் தனது பாடல் மூலம்.
விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற யூனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈழத்துத் தமிழ்ச் சிறுமியின் பாடல் வரிகளைக் கேட்கும் போது, கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்கின்றது.
புலத்தில் வாழ்ந்தாலும் ஊரின் நினைவலைகளுடன் வாழும் எத்தனையோ ஈழத் தமிழர்களுக்கு இப் பாடல் வரிகள் கண்ணீரைப் பரிசளித்திருக்கும்.
அதிலும் இப் பாலகி தனது நாடு, ஊர், வீடு என்பதைக் கண்டிருக்க அவரின் வயது இடமளித்திருக்காது. இருந்தும் பெற்றோர்களின் ஊர்பற்றுத்தான் இச் சிறுமியின் மனத்திலும் ஆழப் பதிந்துள்ளது.
எனவே இப் பற்றாளர்கள் இருக்கும் வரை நிச்சயம் நாம் நிம்மதி பெறுவோம். அதனைத்தான் இந் நிகழ்ச்சியின் நடுவர்களும் எடுத்துக் கூறியுள்ளனர்.
மேலும் பல காணொளிகளுக்கு



















இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில்
கழுவும் மீனில் நழுவும் மீனும் உறுமீனுக்காக
பல்வேறு வினாக்களுக்கு விடைதேடம் இடமாக
‘Tamil struggle will determine the future of democracy in Sri Lanka, both for Tamils and also Sinhala community.’
‘Journalists failed to tell the story of war crimes in Sri Lanka’
முள்ளிவாய்க்காலும் 300′ எனும் ஆங்கிலத்
வன்னிப் போரோடு ஓய்ந்து போன ஈழநாதம்!
எதுவரை சென்றோம்….. எங்கு நிற்கின்றோம்…..




