Published On: Wed, Feb 22nd, 2012

ஒடுக்கப்படும் மக்களுக்காக தனது கலையால் குரல் கொடுக்கும் Annet Henneman

“ஒரு குழந்தையின் வேதனையை ஒரு தாய்க்கு காட்டினால் , உலகில் உள்ள ஒவ்வொரு தாயும் அதை உணர முடியும்”

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .

Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக அனுபவித்த சம்பவங்களை கொண்டு உண்மை கதையில் எழுதப்பட்ட நாடகம் பெர்லின் நகரத்தில் சென்ற கிழமை பல்லின மக்களுக்கு காண்பிக்கப்பட்டது.

குரல் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மனிதர்களின் உண்மைக் கதைகளை உலகத்திற்கு கொண்டு செல்வது Annet Henneman அவர்களின் நோக்கம் ஆகும்.அத்தோடு புலம்பெயர்ந்து அகதிகளாக பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் பல்வேறு சமூகத்தின் உண்மைக் கதைகளும் இவ் நாடகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. Anett Hennman அவர்கள் இன்றைய ஆக்கத்தில் குர்டிஸ்தான் மக்களின் அவல அனுபவங்களை உணர்வு ரீதியாக எடுத்துக்காட்டினார்.
குர்டிஸ்தான் மக்களின் ” எங்களை மறக்கவேண்டாம் ” “Don’t forget us” உண்மைக் கதை நாடக நிகழ்வில் கலந்துகொண்ட ஈழத்தமிழ் மக்களின் மனதில் ஆழமாக பதிந்ததை உணரக் கூடியதாக இருந்தது .

அத்தோடு நாடக இயக்குனர் Annet Henneman அவர்கள் ஈழத்தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டிலே சொல்லனா துன்பத்தை அனுபவிக்கும் நிலையை ஆழமாக விளங்கிக் கொள்ள முடியும் என்பதையும் சுட்டிக் காட்டினார் .

இத்துடன் இவ் நிகழ்வுக்கு பெர்லின் பாரதி கலைக் கூடம் தமது அனுசரணையை வழங்கி நாடக இறுதியில் ஈழத்தமிழ் மக்கள் தாம் அனுபவித்த துன்பங்களை எடுத்துரைத்ததோடு தாய்நாட்டின் பெருமையை பாடல் ஊடாக எடுத்துக்காட்டினார்கள் .

கலை வியாபாரமயமாக்கப்படும் இவ் உலகில் , தனது கலையால் மனிதவுரிமைக்காக போராடும் Anett Hennman அவர்கள் என்றும் பாராட்டப்பட வேண்டியவர் .
பெர்லின் மக்கள் பிரதிநிதி வித்தியா ஜெயசங்கர் அவர்கள் சர்வதேச மனிதவுரிமை அமைப்பு பிரேமன் சார்பாக Annet Henneman அவர்களை நேர்காணல் எடுத்திருந்தார் .
Annet Henneman அவர்களின் நிகழ்வு விடையமாக தமிழ்நெட் இணையத்தளத்தில் சிறப்பு செய்திக்குறிப்பு பிரசுரிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது .

History of Prabakaran & LTTE