தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ?

கடந்த மூன்று ஆண்டுகளாக நீடிக்கின்ற…..:

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் “வீரச்ச்சாவு” பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும்……….?

அண்மையில் சனல் 4 இல் வெளியான தேசியத் தலைவரது வீரச்சாவு பற்றிய விபரணம் பற்றி உலகத் தமிழரின் மெளனம் ஏன் ?

புலிகள் பற்றி பலரின் முனுமுனுப்புக்கள்

  1. மக்களை வெளியேற விடாமல் தடுத்தது தாம் உயிர் தப்புவதற்கு !
  2. இறுதி யுத்தத்தில் புலிகள் மக்களைச் சுட்டார்கள் !
  3. சரண் அடையந்ததும் அடைய வைத்ததும் மகா தவறு அதிலிலும் பார்க்க தற்கொலை செய்திருக்கலாம்!
  4. பிரபாகரன் இனி வந்து ஒன்றும் செய்ய இயலாது இனி அவர் எதற்கு வந்தாலும் வராவிட்டாலும் ஒன்று தான்!
  5. பிரபாகரன் இன்னும் 2009 இருந்து ஆறு ஆண்டுகளில் படை திரட்டி வந்து தமிழீழம் பெற்றுத் தருவார்! 3 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன

இப்படி சொல்லுபவர்கள் முன்பு புலிகளுக்கு பந்தயம் கட்டி காசு கொடுத்த தேசிய வாதிகள் தான்

————

ஆரம்பத்தில் சிறிலங்காவால் நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிவந்து கொண்டிருந்த காட்சிகளும் காணொளிகளும் உலகத்தமிழ் அமைப்புக்களாலும் தேசியவாதிகளாலும் ஆய்வாளர்களினாலும் விவாதிப்பட்டிருந்தன

அவை எல்லாம் பொய் போட்டோ ஷொப் தொழில் நுட்பம், இது அவரில்லை என்று தட்டிக் கழிக்கப்படிருந்தது மட்டுமல்லாம் அதை ஆதரிப்பவர்களுக்கு துரோகிகள் பட்டமும் கொடுக்கப்பட்டது அதில் நாமும் இவர்களை ஆதரித்து வந்ததும் யாவரும் அறிந்த ஒன்று .

சனல் 4 காட்டும் கொடூரப் பதிவுகள்! ”வீடியோக்கள் உண்மை… எடுத்தது சிங்கள கமரா!”

சிங்கள இராணுவத்தினரால் காட்டப்பட்ட அதே காட்சிகள், சனல் 4 தொலைக்காட்சியிலும் காட்டப்பட்டன. ஆனால், இவை உண்மையில் பிரபாகரன்தானா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்த தகவலும் சொல்லப்படவில்லை.

புலிகள் தொடர்பான எல்லா ஆதாரங்களும் சிங்கள இராணுவத்தால் எடுக்கப்பட்டவையே தமிழர்களினாலோ சுயாதீனமானவர்களாலோ எடுக்கப்பட்டவை எதுவுமில்லை

ஆனால் இது பிரபாகரன் தான் என்று சனல் 4 உறுதிப்படுத்தவில்லை என்றாலும் படங்கள் போட்டோ ஷொப் தொழில் நுட்பம் அல்ல என்பது மட்டும் உறுதியாகின்றது

ஆக தமிழ்தேசியவாதிகளால் சொல்லிவந்த போட்டோ ஷொப் தொழில் நுட்பம் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாதது

அதன் பின்னர் அது வேறு ஒருவரின் உடல் என்று அங்க அடையாளங்களை வைத்து விவாதிக்கப்பட்டிருந்தது veltharma.blogspot இங்கே காணலாம்

தலைவர் என்று காண்பிக்கப்பட்ட ஆதாரத்தை வேறு ஒருவர் என்று நிரூபிக்க முற்படுகின்றார்களே தவிர தலைவர் இருக்கின்றார் என்று சொல்லுவதற்கு இது வரை எந்த ஆதாரமும் காண்பிக்கப்படவில்லை

சனல் 4 காட்டும் எல்லாம் சரி ஆனால் இது மட்டும் பிழை என்று வாதிடுவது எதற்கு ?

உங்கள் வாக்கு வேதவாக்கு அல்ல – தேசியத் தலைமையின் இருப்பை மறுத்து பேரனர்த்தம் விளைவித்துவிடாதீர்கள்.ஈழ அதிர்வு-14

தேசியத் தலைவரது இருப்பை மறுதலித்து நீங்கள் அறிக்கை விடுவதனால் உலகத்தமிழர்கள் அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்து துனிசியா,எகித்தை தொடர்ந்து தமிழீழத்தை அமைப்பதற்கான கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்றால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஒன்றும் இருக்கப்போவதில்லை.

ஏன் என்றால் முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் கொத்துக் கொத்தாக உலக வல்லாதிக்க நாடுகள் துணையுடன் சிங்களம் கொன்று குவித்து வன்னி வீதிகளை எமது சொந்தங்களின் பிணங்களால் நிரப்பிய போதும் முள்ளிவாய்க்காலில் முடித்துவைக்கப்பட்ட தமிழினப் படுகொலையின் இறுதி நாட்களில் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட எமதருமை மக்கள் உயிருடன் புதைக்கப்பட்ட போதும் தன்னிச்சையாக கிளர்ந்தெழுந்து புலம்பெயர் தமிழக தெருக்களை வீதிகளை போர்க்களமாக்கி புரட்சிபடைக்காத போது இப்போது மாத்திரம் எங்கிருந்து எதிர்பார்ப்பது…?

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இருப்பை உறுதிப்படுத்தி நாமும் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களுடன் தொடர்ந்து செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிட்டுவருவது வெறுமனே மக்களை திருப்திப்படுத்தி நன்மதிப்பை பெறவேண்டும் என்பதற்காகவல்ல.

எமக்காகட்டும் தமிழகத்தில் உள்ள ஈழஆதரவு தலைவர்களாகட்டும் அனைவரிற்கும் கிடைத்த உறுதியான தகவல்களின் அடிப்படையிலேயே இக்கருத்தினையும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம்.

———–

என்று சொல்லியவர்கள்

தமிழீழத் தேசியத் தலைவரின் உயிரிற்கு பங்கம் நேரவில்லை காலச்சக்கரத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது ஈழதேசம்!!!

அண்மையில் ஈழதேசம் இணையம் காலச்சக்கரம் பார்த்து தலைவர் இருக்கின்றார் என்று ” அறிவிலித்தனமான ஆதாரம்” காட்டுகின்றார்கள்

இவர்கள் பாணியிலே சொன்னால் ……….

கடந்த மூன்று வருடங்களாக தலைவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கொண்டிருக்கின்ற மக்கள் என்ன இது வரை செய்து விட்டார்கள் ?

ஏன் என்றால் முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் கொத்துக் கொத்தாக உலக வல்லாதிக்க நாடுகள் துணையுடன் சிங்களம் கொன்று குவித்து வன்னி வீதிகளை எமது சொந்தங்களின் பிணங்களால் நிரப்பிய போதும் முள்ளிவாய்க்காலில் முடித்துவைக்கப்பட்ட தமிழினப் படுகொலையின் இறுதி நாட்களில் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட எமதருமை மக்கள் உயிருடன் புதைக்கப்பட்ட போதும் தன்னிச்சையாக கிளர்ந்தெழுந்து புலம்பெயர் தமிழக தெருக்களை வீதிகளை போர்க்களமாக்கி புரட்சிபடைக்காத போது இப்போது மாத்திரம் எங்கிருந்து எதிர்பார்ப்பது…?

கடந்த மூன்று வருடங்களாக தலைவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கொண்டிருக்கின்ற மக்கள் என்ன இது வரை செய்து விட்டார்கள் ?  ஆகவே தலைவரின் வீரச்சாவை அறிவித்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை 

அப்படியிருக்கும் போது எதற்கு மூடி மறைக்கின்றார்கள்

எத்தனை மக்கள் இப்போது ஆர்ப்பரிக்கின்றார்கள் ?

அதிலும் பார்க்க இலங்கைக்கு உல்லாசப் பயணம் செய்யும் எண்ணிக்கை அதிகம்

————————-

சரி

இது தலைவர் இருக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுவோம்
———————————————————————————-
கேள்வி. 1
பிரிகேடியர் சொர்ணத்திற்கு பிற்பாடு யாரும் வீரச்சாவடையவில்லையா ? ஏன் அதன் பின்னர் அறியப்பட்ட – நடேசன் , புலித்தேவன் , ரமேஷ் , சூசை என்று எவர் பெயரும் குறிப்பிட்டு வீரவணக்கம் , நினைவுவலைகள் செலுத்தவில்லை ?

கேள்வி.2
பெயர் அறிந்த புலிகள் எவரும் உயிரோடு இல்லை என்ற பின்னர் தலைவர் மட்டும் தப்பிச் சென்றிருப்பாரா ?

அப்படிச் சென்றிருந்தாலும் மறைந்திருப்பதற்கு உலகில் தமிழருக்கு ஆதரவு கொடுக்கும் நாடு ஒன்றிருக்கின்றதா ?

கேள்வி.3
சனல் 4 தொடக்கம் எல்லோரும் புலிகள் போர்க்குற்றம் செய்தவர்கள் என்று சொல்லும் போது இதுவரை யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை அப்படியானல் பிரபாகரன் வந்தால் அவரும் போர்க்குற்றவாளி தானோ ?

———
ஈழத்திலும் சரி புலத்திலும் சரி ஒரு சில வீதம் தான் போராட்டத்தில் பங்களிப்பு மற்றவர்கள் எல்லாம் பார்வையாளர்கள் தான்

புலம் பெயர்ந்தவர்களில் எத்தனை பேர் தாம் அல்லது பிள்ளைகளை அடுத்த கட்ட போராட்டங்களுக்கு அனுப்புத் தயார் ?

தாய் நாட்டிற்காக தமது இளமைகாலங்களையும் உயிர்களையும் அர்ப்பணித்த அந்த போராளிகள் ,மாவீரர்கள் போன்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை தமது ஓய்வு நேரத்தைத் தானும் பல புலம்பெயர்ந்தவர்கள் அரசியல் போராட்டங்களுக்கோ பரப்புரைகளுக்கோ செலவழிக்கத் தயாரில்லை

எங்கேயும் ஒரு சிலர் தான் அதிலும் சிலர் பச்சோந்திகளும் , உளவாளிகளும்

சிங்களவனும் துரோகிகளும் இன்னும் அதே வீச்சுடன் எதிர்ப்பரப்புரைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க தமிழர்கள் எதுவும் செய்வதில்லை என்றே சொல்லவேண்டும்

எங்கே பார்த்தாலும் எமக்கு எதிரான பின்னூட்டல்கள் தான் அதிகம்

இந்த இலட்சனத்தில் புலம்பெயர்ந்தவர்களாவது ? அடுத்த கட்டப்போராவது ?

உயிரை என்ன மயிரைக் கொடுக்கக் கூட யாரும் தயாரில்லை என்னும் போது

—-
அண்மையில் ஒரு கட்டுரை பார்த்தேன்

புலிகள் புலம்பெயர்ந்த தமிழர்களினூடாக வீறு கொண்டெழுவார்கள் என்று

ஆனால்

உண்மையில் புலிகளின் பணத்தை கொண்டு தான் பல புலம்பெயர்ந்தவர்கள் வீறு கொண்டெழுந்து கொண்டிருக்கின்றார்கள்

கனடாவில் மக்களால் உருவாக்கப்பட்டவையான CMR , CTR , TVI தனி மனித சொத்துக்களாகி விட்டன மற்றவற்றை பற்றிச் சொல்லத் தேவையில்லை

வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம் என்று சாத்திரி என்பவர் தனது வலைப்பூவில் எழுதியது ஞாபகம் வருகின்றது

தமிழ்தேசிய அமைப்புக்கள் , ஊடகங்கள் என்று வேடம் தான் போடுகின்றன தாம் சொல்வதும் , செய்வதும் மட்டுமே தமிழ்த்தேசியம் மற்றவை எல்லாம் வெத்துக்கள் என்பது போல் செயற்படுகின்றன

அதிலும் பல வயிறு வளர்ப்பதிற்கே தேசியம் பேசுகின்றன

எது எப்படியோ இனியும் இவர்களின் வீரவசனங்களை நம்பத் தயாரில்லை

நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதி காள் நெஞ்சமெலாம் எமை நினைத்து சென்றீரோ  

prabakaran godதமிழனைத் தலைநிமிர வைக்க முயன்று தோற்றுப்போன தேசியத் தலைவர் பிரபாகரன் , மாவீரர்கள்,போராளிகள் ,மக்களுக்கும் தலைதாழ்த்தி எனது வீரவணக்கத்தை செலுத்திக் கொள்கின்றேன்

படம் இன்போதமிழ்

நன்றிகள்

எல்லாளன்

——————————-
வருவார்…. வருவார் என்று கூறிக் கூறியே: தலைவனை மறந்த தமிழினம்…..!

போரின் கதாநாயகனாக இருந்தவர் பிரபாகரன்.

ஆயிரமாயிரம் போராளிகளினதும், நாட்டுப்பற்றாளர்களினதும் மரணங்களுக்கு ஒரு அர்த்தத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தியவர் பிரபாகரன் தான்.

ஆனால் அவருக்காக ஒரு நினைவு நாளை நடத்த முடியாதளவுக்கு ஈழத்தமிழினம் பிளவுபட்டு நின்றது.

இதைவிட சோகமும், சோதனையும் வேறெந்தத் தலைவனுக்கும் வந்ததில்லை.

அவர் வருவார்…. வருவார் என்று கூறிக் கூறியே அவரது நினைவை மறக்கச் செய்து விட்டவர்கள் நாம்.

வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடிக்க வேண்டிய ஒருவரின் நினைவுகளை அழிக்கின்ற காரியத்தைத் தமிழினம் செய்து கொண்டிருக்கிறது.

இந்தச் சகதிக்குள் இருந்து மீண்டெழும் வரை தமிழருக்கு விடிவை நோக்கிய பயணம் ஒரு போதும் தொடங்கப் போவதில்லை.

இந்த ஒரு விடயத்தில் கூட சரியான முடிவை எடுக்க முடியாத தமிழினத்தால், எப்படி எதிர்கால வாழ்வு பற்றிய தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும்?

இதனால் தான் இத்தனை அவலம் தமிழருக்கு மீணடும், மீண்டும் வந்து கொண்டிருக்கிறது.

நன்றி மறப்பது நன்றன்று.

ஆனால் நன்றி மறந்த இனமாக மாறிப் போன தமிழர்கள் எப்படி தமக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?

தமிழருக்கே முகவரி கொடுத்த தலைவனின் முகவரியையே இல்லாமல் செய்யும் அளவுக்கு தமிழினம் சிங்களதேசத்தின் புலனாய்வுச் சதிகளுக்குள் சிக்கிப் போயுள்ளது.

இந்தநிலையில் எப்படி தமிழருக்கென நீதியான வாழ்வை நாம் எதிர்பார்க்க முடியும்?

————

 

Facebook Comments

முகநூல் பின்னூட்டல்கள்

prabakaran-history
EelamView All Rights Reserved
error: முடிந்தால் பகிரவும் திருட வேண்டாம் !