பிரிகேடியர் மணிவண்ணன் வீரவணக்கம்

Brigadier Manivannan

விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.

“ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.mannivannan-2

முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.

இரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.

மரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.

ஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.

ஆனந்தபுர விடிவெள்ளிகள் வரிசையில் வரலாற்றில் போற்றப்படும் ஒரு உன்னதமான போராளியாக திகழ்கின்றார் பிரிகேடியர் மணிவண்ணன்

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன். தொடக்க காலத்திலேயே கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது விடுதலையின் பணியை மேற்கொண்டிருந்தார்.

கேணல் ராயு அவர்களின் வீரச்சாவுக்கு பின்னர் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார்.manivannan

கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களின் செயர்ப்பாட்டுக் காலப்பகுதியில் தான் சிறிலங்காப்படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் பாரிய இழப்புக்களை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்ககது.

பலாலித் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள், முகமாலை – பளை மீதான தாக்குதல்கள் மற்றும் வவுனியா ஜோசப் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் அதே போன்று மன்னார் சிறிலங்கா படைத்தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் என்று பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை சந்தித்திருந்தது உண்மையே.

அதே போன்று முகமாலை சமர்க்களத்திலே ஆட்லறிகளின் நேரடி சூச்சின் மூலம் பல ராங்கிகளை அழித்ததும் இவரின் காலப்பகுதியிலே தான்.

விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.

முன்னேறுகின்ற படையினரின் வழங்கல் தளங்களையும், முதன்மையான படைத்தளங்களையும் தாக்கியழிக்கும் கடமையே கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணிக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தொடக்க காலத்தில் இவ்வாறான பல தாக்குதல்களை கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணி மேற்கொண்டிருந்தாலும், போர் நெருக்கடியான காலங்களை சந்தித்திருந்த போதிலும் அதாவது வன்னிமண்ணை சிறிலங்காப் படைகள் முற்றுகையிட்டு மண்ணையும் மக்களையும் சூற்றிவளைத்திருந்த காலப்பகுதியில் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருந்ததன. அதாவது தொலைதூரத் தாக்குதலுக்கு பதிலாக இராணுவத்துடன் நேரடி சூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன.

இந்த வகையில் தான் புதுக்குடியிருப்பு மண் சிறிலங்கா படைகளின் வல்வளைப்புக்குள் சென்றுகொண்டிருந்தபோது நேரடியாகவே ஆனந்தபுர மண்ணிலே பல ஆட்லறி நிலைகளை உருவாக்கி நேரடியான பல தாக்குதல்களை படையினர் மீது ஏற்படுத்தி பல இழப்புக்களை ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர்.

அந்தக் களமுனைகளிலே போராளிகளுக்கு பிரிகேடியர் மணிவாணன் அவர்கள் கட்டளைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில்தான் சிங்களப் படையின் தாக்குதலில் ஆனந்தபுர மண்ணிலே பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் இன்னும் சில தளபதிகளும், போராளிகளும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்து போனார்கள்.

எங்கள் மண்ணின் தேசக்காற்றில் இவர்கள் மூச்சுக் காற்றும் நிலைத்திருக்கும் என்பது உறுதி!

நன்றி: நவரத்தினம் தினேஷ்

 

Facebook Comments

முகநூல் பின்னூட்டல்கள்

prabakaran-history
EelamView All Rights Reserved
error: முடிந்தால் பகிரவும் திருட வேண்டாம் !