நச்சுக் குண்டு வீசி படுகொலை செய்யப்பட வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் (படம் இணைப்பு)

2009ஆம் ஆண்டு 03ஆம் மாதம் 4 ம் திகதி நேரடி மோதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிய இந்திய – இலங்கை இராணுவம் கோழைத்தனமாக நச்சு குண்டு வீசி படுகொலை செய்தனர். இதில் வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் அண்ணா மற்றும் பல போராளிகள் வீரகவியமனவர்கள்.

வரலாற்று நாயகர்களில் வரலாறுகள் என்றும் எங்களுடன்! புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் அக்கினி சமரில் வீரவரலாறான எங்கள்அங்கினி குஞ்சுகளை நச்சுக்குண்டுகள் கொண்டு இனஅழிப்பினை அழித்த சிங்கள இனவெறியாளர்களின் இனக்கொடூரங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை அக்கினிகுஞ்சுகளை இன்றும் எங்கள் மனங்களில் இறுக பற்றுகின்றோம்.

அன்று 2009ஆம் ஆண்டு 03ஆம் மாதம் இறுதி நாட்கள் ஆனந்தபுர மண்ணில் அக்கினி சுவாலைமூண்ட தாக்குதல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன இவ்வாறான தாக்குதல்களுக்கு விடுதலைப்புலிகளின் போராளிகளை அழிக்கவென்று சிங்களப்படையினர் தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை களமுனையில் பயன்படுத்துகின்றார்கள். மணித்துளிகள் நகர தாக்குதல்களும் உச்சம் பெறுகின்றது ஆனந்தபுர மண்ணில் இருந்து தலைவர் அவர்களை பத்திரமாக மீட்டுக்கொண்டு செல்கின்றார்கள் சிறப்பு போராளிகள்.

இன்னிலையில் ஆனந்த புரம் மண்ணில் நின்று போராளிகள் சமராடிக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களை மீட்டெடுக்கமுடியாத நிலையில் எதிரியின் இறுக்கமான சூள்நிலை இன்னிலையில் காயம் அடைந்த பிரிகேடியர் தீபன் அண்ணாவினை பின்தளத்திற்கு கொண்டு செல்லவேண்டிய தேவை அங்கங்கு ஸ்ரீலங்காப்படையினர் ஊடுருவிவிட்டார்கள் தீபன் அண்ணா காயமடைந்த நிலையில் ஒருநாள் அதிகாலை கொண்டு செல்லப்படுகின்றார் அன்று செல்லும் வளியில் ஸ்ரீலங்காப்படையினரின் பாரிய தாக்குதல் ஒன்றிற்கு முகம் கொடுத்து அதில் தாக்குதல் நடந்தேறுகின்றது. அந்த உக்கிர தாக்குதலில் பிரிகேடியர் தீபன் அண்ணா அந்த மண்ணினை முத்தமிடுகின்றார் .தீபன் அண்ணா உள்ளிட்ட போராளிகளை அழிக்க எதிரியவன் பயன்படுத்திய நச்சுக்குண்டுகள் என்பதை இன்றும் உறுதிசெய்கின்றோம்.

தடைசெய்யப்பட்ட பல்வேறு குண்டுகளையே சிங்கள படையினர் களமுனையில் பயன்படுத்தி இந்த இனஅழிப்பு போரினை நடத்தினார்கள்.இவ்வாறு அன்று ஆனந்தபுரம் மண்ணில் பல வீரத்தளபதிகள் வரலாறாகின்றார்கள் ஆனந்தபுரத்தில் இருந்து தலைவர் சென்ற பிறகு அந்த மண்ணில் முன்னூறு வரையான போராளிகள் நின்று தாக்குதல்களை தொடுக்கின்றார்கள் அவர்களுக்கான இறுதி கட்டளை நீங்கள் உடைத்துக்கொண்டு வரமுடிந்தால் வாருங்கள் என்றதுதான் அந்த கட்டளை காயமடைந்த போராளிகளை காப்பாற் முடியாது இறந்தவர்கள் அந்தந்த இடங்களில் விடப்படுகின்றார்கள் இதில்தான் எதியின் முற்றுகை வலயத்தினை ஊடறுத்து நூறுவரையான போராளிகள் தாக்குதலை நடத்திக்கொண்டு அந்த இடங்களை விட்டுவெளியேறுகின்றார்கள் அதாவது சிறு சிறு அணிகளாக அந்தபோராளிகள் களமுனையினை விட்டு வெளியேறுகின்றார்கள்.ஏனைய போராளிகள் எதிரியின் தொடர் எறிகணை மழையிலும் நச்சுக்குண்டு வீச்சிலும் வீரச்சாவினை அடைகின்றார்கள் அவர்களது உடலங்கள் எதிரியினால் கைப்பற்றப்படுகின்றது.

அவைதான் ஆனந்தபுரம் மண்ணில் எரியால் சிதைக்கப்பட்ட உடலங்கள் இதில் இன்னும் ஒரு நிகழ்வு நடந்தேறுகின்றது இந்த பகுதியில் இறுதியில் காயம் அடைந்த நிலையில் இருந்த போராளிகளை ஸ்ரீலங்காப்படையினர் உயிருடன்பிடித்து சித்திரவதை செய்கின்றார்கள்.இதிலும் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தன.

இது இவ்வாறு ஆனந்தபுரம் மண் ஸ்ரீலங்காப்படையினரின் நெருப்பு மழையினால் நனைந்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது .இவ்வாறான நிலையில்தான் படையினர்; பலத்த இழப்புக்களுக்கு மத்தியில் ஆனந்தபுரம் மண்ணினை பிடிக்கின்றார்கள்.தீபன் அண்ணா எத்தனையோ களங்களை கண்ட தளபதி மட்டுமல்லாமல் எத்தனையோ பெயர்குறிப்பிட்டும் குறிப்பிடாமலும் நடத்தப்பட்ட தாக்குதல்களின் வெற்றிகளுக்கு பின்னாலும் அவரது கரங்கள் இருக்கின்றன.

வடபோர் முனையின் கட்டளைத்தளபதியாக இருந்து அவர் ஆற்றிய சாதனைகள் சாதராணமானவையல்ல தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அவருக்கென்றொரு தனி வரலாறு எழுதும் அளவிற்கு அவரது திறமைகள் எதிரியினால் கூட வியந்துபாக்கப்பட்டவை அந்த சிறப்பு மிக்கதளபதியின் வீரச்சாவு நிகழ்வு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அன்று நிகழ்தேறுகின்றது அந்தநினைவூகளை என்றும் மறக்கமுடியாது.

Facebook Comments

முகநூல் பின்னூட்டல்கள்

prabakaran-history
EelamView All Rights Reserved
error: முடிந்தால் பகிரவும் திருட வேண்டாம் !