ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

leader prabakaran tribute 2வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”leader prabakaran tribute 6

 

புலிகள் இல்லாத சூழலில் தான் அவர்களின் அருமை புரியத் தொடங்கியுள்ளது (காணொளி இனைப்பு)

திரும்பிய திசையெங்கும் சிங்களப்பேய்கள் தான் பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன.

இனிமேல் தமிழருக்கு படைமுகாம்களைச் சுற்றி வரையறுக்கப்பட்ட வாழ்வு தான் என்றாகி விட்டது. சமூகக் கொடுமைகளும், குற்றங்களும் பெருகிப் போய் விட்டன. பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் என்றுமில்லாத வகையில் கோலோச்சத் தொடங்கியுள்ளன. இதற்கெல்லாம் காரணம் முன்னர் இருந்த பாதுகாப்புக் கவசம் உடைபட்டுப் போனது தான்.முன்னர் புலிகளின் ஆட்சியில் இருந்து வந்த கடுமையான தண்டனைகள் பலரையும் விமர்சனத்துக்குள்ளாக்கியிருந்த்து. ஆனால் அதுவே ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், கலாசார விழுமியங்களையும் காத்து நின்றதோடு மக்களுக்கு சமூகப் பாதுகாப்பையும் கொடுத்து வந்தது. இன்று அந்தப் பாதுகாப்பு இல்லாது போய்விட்ட நிலையில்- யாரும், எப்போதும், எப்படியும் குற்றங்கள் செய்யலாம் என்று துணிந்து விட்டனர். இலகுவாகத் தப்பிக்கலாம் என்பதால் எந்தக் கூச்சமும் இல்லாமல் குற்றங்களில் இறங்குகின்றனர்.

இந்த மூன்று ஆண்டுகளில் மக்கள் புலிகளின் அருமையை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பார்கள். அதேபோல புலிகள் இல்லாத சூழலில் தான் அவர்களின் அருமை புரியத் தொடங்கியுள்ளது. ஆனால் தமிழரின் துரதிஸ்டம் என்னவென்றால், இனிமேல் இதேபோன்றதோர் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியாது என்பது தான். உலக ஒழுங்குமுறை அதற்கு இடமளிக்காது. தமிழரின் தலைவிதியும் அதற்கு இடம்கொடுக்காது.

முள்ளிவாய்க்காலிலேயே தமிழரின் செழிப்பான வாழ்வும், எதிர்காலமும் சீர்குலைக்கப்பட்டு விட்டது. அதற்கு சிங்களப்படைகள் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் தான் பொறுப்புக் கூற வேண்டும். போரை நிறுத்த ஐ.நாவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறது ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கை. உலகத்தின் கண்முன்னே தான் தமிழருக்கு இந்தக் கொடுமைகள் எல்லாம் இழைக்கப்பட்டன. முள்ளிவாய்க்காலில் பீரங்கிகள் மூலம் தமிழரைக் கொன்றொழித்துக் கொண்டிருந்த போது- அமெரிக்காவில் இருந்தபடியே அதை செய்மதிப் படங்களின் ஊடாகப் பார்த்திருக்கிறார்கள். உள்ளிருந்தே தகவல்களைப் பெற்றிருக்கிறது இந்தியா. ஆனாலும் யாருக்கும் அங்கே தமிழர் மீது இரக்கமே வரவில்லை. அங்கிருந்த மூன்றரை இலட்சம் மக்களின் அவலத்தை விட அவர்களுக்கெல்லாம் பெரிதாக இருந்தது- புலிகளின் அழிவு தான். அதை எல்லோருமாகச் சேர்ந்தே செய்து முடித்திருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கெல்லாம் நிம்மதி வந்துவிட்டது.

ஆனால் தமிழரின் நிம்மதி பறிபோய் விட்டது. தமிழர்கள் போரின் போது இழந்தவற்றையும் சரி, அதன் பின்னர் அவர்கள் இழந்து போயுள்ள நிம்மதியையும் சரி, எந்த உலக சக்தியாலும் கொடுத்து விட முடியாது. இவர்களிடத்தே இருந்து வந்த ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் இனிமேல் ஏற்படுத்தி விட முடியாது. எல்லாம் சீர்குலைந்து வேரறுக்கப்பட்டு விட்டது. இது தான் தமிழருக்கு முள்ளிவாய்க்கால் கொடுத்த பரிசு.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.முள்ளிவாய்க்காலில் தமிழரைச் சீரழித்து, சின்னா பின்னமாக்கியவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்காமல் விடப் போவதில்லை. இப்போதே பலரும் அதற்கான தண்டனையையும்- வலியையும் சுமக்கத் தொடங்கி விட்டனர். இது இன்னமும் நீளப் போகிறது. தமிழருக்கு எதிராக தொடரப்பட்ட போரும், அதனால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கும் காரணமாக இருந்தவர்களை நீதி ஒரு போதும் தண்டிக்காமல் விடாது. அந்த நம்பிக்கை ஒன்று தான் தமிழரை அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கிறது. ஆனாலும் அது வெளிச்சத்தை நோக்கிய பயணமாக அமையுமா அல்லது இருளைத் தேடிய பயணமாக அமையுமா என்பதை தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

-இன்போ தமிழ் குழுமம் – prabakaran god

v.prabaharan v

சிறப்பு வெளியீடு
பாடல்:முள்ளிவாய்கால் முள்ளிவாய்கால்

பாடியவர்: பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா

உருவாக்கம் : புலிகளின்குரல் நிறுவனம்

இசை : இளங்கோ செல்லப்பா

வரிகள் : வன்னிமைந்தன்

 

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
கருகத் திருவுளமோ?தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?தண்ணீர் விட்டோ வளர்த்தோம்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ?மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு
கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ?

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செப்பித் திரிவாரடி கிளியே செய்வதறியாரடி கிளியே

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்

Facebook Comments

முகநூல் பின்னூட்டல்கள்

prabakaran-history
EelamView All Rights Reserved
error: முடிந்தால் பகிரவும் திருட வேண்டாம் !