உகண கப்பல் மீதான தாக்குதல் கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள்

[maj_santhana2.jpg]

[maj_santhana.gif]26- 06- 2000

அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள்.“அடிக்கடி வீட்டை வா மோனை” என்று கூறிய தன் தாயிடம் சொல்கிறாள் “கிட்டடியில வந்திடுவன் அம்மா” அவள் கூறியதன் அர்த்தம் புரியாது கண்ணீரோடு கட்டியணைத்து முத்தமிட்டு விடைகொடுக்கின்றாள் அந்தத் தாய். இன்னும் சில நாட்களில் நிழற்படமாகத்தான் தன் மகள் தன்னிடம் வரப்போகிறாள் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை அத்தாயுள்ளம்.

ஒல்லியான தோற்றம், எப்போதும் முகத்தில் இனிய புன்னகை இவள்தான் மேஜர் சந்தனா. தனது இனத்தின் விடுதலை வேண்டிப் போராடப் புறப்பட்ட ஆயிரம் ஆயிரம் வீராங்கனைகளில் இவளும் ஒருத்தி. மகளிர் படையணியில் இருந்து 1995ஆம் ஆண்டு தலைவரின் அனுமதியுடன், கரும்புலிக் கனவுகளுடன் தன்னை கடற்புலிகளின் அணியில் இணைத்துக்கொண்டாள். கரும்புலி அணிகளுக்கான விசேட பயிற்சிகளை முடித்துக் கொண்டு எதிரியின் இலக்குகளைத் தேடத் தொடங்கினாள். எதிரியின் அதிஸ்ரம், அவள் வெடி மருந்து நிரம்பிய படகுடன் கடலில் இறங்கும் போதெல்லாம் அவன் தப்பிப் பிழைத்துச் சென்றுகொண்டிருந்தான். சந்தனா கூட அடிக்கடி கூறுவாள் “என்ர படகு கடலுக்க நிக்குதெண்டு நேவிக்காரனுக்குக்கூடத் தெரியும் அதுதான் உயரவாப் போறான்” என்று.

தன் நகைச்சுவைப் பேச்சால் அனைவரது உள்ளங்களிலும் குடிகொண்டிருந்த சந்தனா, தன் இறுதிக் கணங்கள் வரைகூட எந்தவித மாற்றங்களுமின்றி அதே சிரிப்பு, அதே நகைச்சுவைப் பேச்சு என கலகலப்பாகவே இருந்தாள். அவளது இறுதித் தாக்குதலுக்காக படகை கடலில் இறக்கும் போது தன் சக போராளியிடம் தனது புதிய காலணியை கழற்றிக் கொடுத்து விட்டு “நான் திரும்பி வரமாட்டன்” இதை நீ வைச்சிரு என்று கூறிவிட்டு மறுநிமிடமே தனது குறும்புத் தனத்துடன் சொன்னாள் “திரும்பி வந்தா குறைநினைக்காமல் கழட்டித் தா” என்று. அந்த இறுதிக் கணப்பொழுதிற்கூட மற்றவர்களைச் சிரிக்க வைத்து மகிழ்ந்தாள் சந்தனா.

26- 06- 2000 அன்று யாழ் குடா படைகளுக்குரிய ஆயுதங்கள், வெடிபொருட்கள், உணவுப் பொருட்கள் என்பவற்றை ஏற்றிக்கொண்டு கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்துகொண்டிருந்தது ‘உகண’ கப்பல். கடற்புலிகளது சண்டைப்படகுகளும், கரும்புலிப்படகுகளும் கடலில் களமிறங்கின. கடற்படையின் இரு பீரங்கிப் படகுகள் மற்றும் 6 டோராப் படகுகள் சகிதம் பாதுகாப்பாக வந்தது ‘உகண’ கப்பல். பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து 55 கடல்மைல் தொலைவில் வைத்து கடற் புலிகளால் வழிமறிக்கப்பட்டு கடும் சமர் வெடித்தது. சமர் நடுவே லாவகமாக உள் நுழைந்த கரும்புலிப் படகுகள் உகண கப்பலுடன் மோதி வெடிக்க, உகண முற்றாக எரிந்து கடலில் மூழ்கியது. 10 கடற்படையினர் பலியாக கடற்படையினரின் டோராவும் சேதமாகிப்போனது.

மேஜர் சந்தனாவுடன், கடற்கரும்புலிகளான லெப். கேணல் ஞானக்குமார். மேஜர் சூரன், மேஜர் நல்லப்பன், கப்டன் இளமதி, கப்டன் பாமினி ஆகிய 5 காவிய நாயகர்களும் கடலில் சங்கமமாகினர்.






photo190photo193
photo194
photo195
photo191
photo192

*****************
2 ம் லெப்.வனஜா/பிரியங்கா அவர்களின் வீரவணக்க நாள்

26 .06 .1999 ம் ஆண்டு மன்னார் பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவினை தழுவிக்கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவற்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகின்றோம்.

Facebook Comments

முகநூல் பின்னூட்டல்கள்

  • வீரவணக்கம்: ஆனி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம் – EelamView on முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி ,மேஜர் நிதன் ,கப்டன் சாதுரியன் வீரவணக்க நாள்
  • பலாலி விமானப்படைத்தளத் தாக்குதல்கள் 1,2 – EelamView on பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்
  • ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் வெள்ளை மாளிகையின் உயர்விருது! – EelamView on Siva Sivananthan UIC physicist named White House Champion of Change
  • තමිල්නාඩු සිසුන් අතර ප්‍රථම බෙදීම ඇතිකල ටී.පාණ්ඩියන් වෙත සිසුන්ගෙන් ඉල්ලීමක් (ඊළාම් විව් වෙබ් අ on தமிழக மாணவர்களிடையே முதல் பிரிவினையை ஏற்படுத்திய தா.பா.வுக்கு மாணவர்களின் வேண்டுகோள்
  • பிரபாகரனின் அன்பு நண்பர் ரி.எம்.சௌந்தரராஜன் – EelamView on சௌந்தரராஜன்:நடிப்பிசையின் துடிப்பு ஓய்ந்தது
  • பிரபல்யங்கள்

    website security