Published On: Sat, Nov 21st, 2015

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்திலிருந்து…

mullivaikal tiger uniform

ஒரு புலி வீரனின் சீருடை
வீரத்தின் அடையாளமாய்
அமைதியாக
உறங்கிக் கொண்டிருக்கிறது!!!

வலி கொண்ட இனத்தின்
விடிவிற்காக – வரிப்புலி சுமந்து
வீறுகொண்டெழுந்த வேங்கை ஒன்று
வீரப் போர் புரிந்து….
வீரமரணம் அடைந்த பின்பும்…
தனது உடல் விதையாகிப் போக…
தன் உடல் சுமந்த
வரிப் புலிச் சீருடையின்
ஒற்றைப் பகுதியை…
வீரத்தின் அடையாளமாய்
விட்டுச் சென்றுள்ளான்.!!

ஆறாண்டுகள் போன பின்பும்…
மங்கிப் போகாத பொலிவுடன்
யுத்தத்தின் காயங்களைச் சுமந்தவாறு
ஒரு புலி வீரனின் சீருடை
வீரத்தின் அடையாளமாய்
முள்ளிவாய்க்கால் மண்ணிலே
இன்றும் அமைதியாக…
உறங்கிக் கொண்டிருக்கிறது!!!

“விடுதலைப் புலிகள் வீழ்வதுமில்லை.!!
இலட்சிய வீரர்கள் இறப்பதுமில்லை!!!”

கவியாக்கம்:- வல்வை அகலினியன்.

வீரத்தின் அடையாளமாய் உறங்கும் புலி வீரனின் சீறுடை, பாருங்கள் உறங்காத வீரம்.

தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடி வீரமரணத்தை தழுவிய வீரமறவர்களின் மாதம் இம் மாதமாகும். கார்த்திகை மாதம் 21ம் திகதி தொடக்கம் 27ம் திகதிவரை மாவீராநாள் வாரமாகும். அந்தவகையில் இன்று மாவீரர் நாளின் தொடக்கநாள் .

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிராக போராடி ஆயிரக்கணக்காண மாவீரர்கள் மாண்டு போயினர் அவர்களின் வித்துடல்களை முள்ளிவாய்க்கால் பாடசாலை அருகே விதைத்தார்கள்.

தமிழீழத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் எதிரிகளால் உடைக்கப்பட்டுள்ள போதிலும் முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் உடைக்கப்படவில்லை ஏனெனில் கல்லறைகள் கட்டப்படும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனால் மண்ணுள் விதைந்த வீரர்களை விதைத்தவர்களுக்கு மட்டுமே தெரிகின்றது.mullivaikal cemetry now

இன்று மேற்குறிபிட்ட துயிலுமில்லத்திற்கு சென்றபோது கார்த்திகை பூக்கள் பூத்து மிக அழகாக கட்சியளித்தது .மாவீரின் சீருடையின் ஒரு பகுதியும் அங்கே காணப்பட்டது.

அமைதியான அந்தச்சூழலில் அவர்களின் உறுதிமொழிகள் மட்டும் செவிகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.

இன்னும் ஆறு நாட்களில் இந்த இடத்திற்கு செல்லமுடியாமல் இருக்கும் இராணுவத்தினர் சுற்றிவளைத்திருப்பார்கள்.உள்நுளையாதபடி….!

Facebook Comments

முகநூல் பின்னூட்டல்கள்

prabakaran-history
EelamView All Rights Reserved
error: முடிந்தால் பகிரவும் திருட வேண்டாம் !