தமிழர்கள் ஆபாசத்தைத் தான் தேடுகின்றார்களா ?

தேடு தளங்களில் தமிழ், Tamil  என்று தேடும் போது ஆபாசமான பெண்களின் பதிவுகள் தான் முன்னிலையில் வருகின்றன. அதற்கு காரணம் தமிழர்கள் அதிகமாக ஆபாசத்தைத் தான் தேடுகின்றார்களா ? அல்லது தமிழ் பற்றிய பதிவுகள் வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்யப்படுகின்றனவா அல்லது தேடப்படுவதில்லையா ?

ஒன்று அதிகமாகத் தேடப்படும் அடிப்படையில் தான் பதிவுகள், படங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

இரண்டாவது படங்களின் தலைப்புக்கள்

இது பற்றி முன்பு நாம் குறிப்பிட்டிருந்தோம்

அனேகமான படங்களில் தலைப்புக்கள் படங்களோடு சம்பந்தமில்லாதவை, பெரும்பாலனவை முற்றுப்பெறாதவையாகவும், இலக்கங்களிலும் இருக்கின்றன.
அது பதிவிடுபவர்களின் அறியாமையும் , சோம்பேறித்தனமும் கூட !

பெரும்பாலான தமிழர்கள் பதிவுகள் தங்கிலிஸ்லில் தான் இன்னும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள் !

தேடு தளங்கள் தேடும் போது அவை வெளிவருவதில்லை முழுமையான தலைப்புக்கள் தான் முதலில் வெளிவருகின்றன

இது ஐந்தாவது வரியில் தான் இருக்கின்றது  ஏன் என்றால் தலைப்பில் தமிழ் முன்னிலையில் இல்லை விக்கிபீடியாவில் இப்படி இருக்கின்றது  இதை இணைத்த தமிழர் முறையான தலைப்பை இடவில்லை

https://en.wikipedia.org/wiki/Sundar_Pichai

இப்படியான முறைக்கேடுகள்  பற்றி தமிழர்கள் யாரும் முறையிடுவதில்லை, யாரோ ஒருவர் செய்வார்கள் என்று வெறும் வெத்து வேட்டுக்களாகத் தான் எல்லாத் தமிழர்களும் இருக்கின்றார்கள்

இன்னொரு தமிழனுக்கு எதிராக என்றால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு செயற்படுவார்கள் அதனால் தான் தமிழர்கள் இன்னும் நாதியற்ற இனமாக இருக்கின்றார்கள்

ஆகவே தமிழ் பற்றிய பதிவுகளை , படங்களை உரிய தலைப்போடு பதிவேற்றுங்கள் அத்தோடு தேடுதளங்களான கூகிள் , பிங் போன்றவற்றுக்கு அறிவியுங்கள்

தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி கூகுள் முன்பு இப்படித்தான் பதிவிட்டிருந்தது

Google branding prabakaran as terrorist but not bin laden ?

இப்போது மாற்றப்படிருக்கின்றது

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடத்தை மறைத்த கூகுள் ஏத் [Google Earth ]

Facebook Comments

முகநூல் பின்னூட்டல்கள்

prabakaran-history
EelamView All Rights Reserved
error: முடிந்தால் பகிரவும் திருட வேண்டாம் !